Friday, January 19, 2007

Yoga in busy life

Below is the extract taken from Rajini's interview to Ananda Vikatan at the end of Rajini's Travelogue to Himalayas (2005) which got published in Ananda Vikatan that year.He talks about Dhyanam here.

It is a simple and neat explanation of how to start dhyanamJust go ahead...Question:

யோகாசனம், தியானம் பழகின பிறகு உங்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன... அதுபத்திக் கொஞ்சம் சொல்லுங்க?

Answer: நிறைய! அது வந்து... நேரடியா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணணும். அப்போதான் அந்த சக்தி... பவர் புரியும். சும்மா யோகா, தியானம்னு பேச ஆரம்பிச்சா, அட போப்பா!ன்னுட்டுப் போயிடுவாங்க. யோகா உடம்புக்கு... தியானம் மனசுக்கு!எல்லோருக்கும் டென்ஷன், பிரச்னை, அவஸ்தை, தலைவலி இருக்கு. காலைல வெளியே கிளம்பறப்போ,இன்னிக்குப் புதுசா பிறந்தோம்டா!னு நினைச்சுக்கிட்டு கிளம்புங்க. ஈவினிங் வீட்டுக்கு வந்ததும் அப்பிடியே உட்காருங்க... சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் கண்ணு மூடி உட்காருங்க. இன்னிக்குக் காலையிலிருந்து சாயந்திரம் வீடு திரும்பற வரை என்னவெல்லாம் நடந்துதுனு நெனச்சுப் பாருங்க.ஜஸ்ட் திங் அபௌட் இட்! நீங்க யாரையோ காயப்படுத்தி இருக்கலாம். உங்களை யாரோ சந்தோஷப்படுத்தி இருக்கலாம். ஒரு வேலை நல்லபடியா முடிஞ்சிருக்கும். செய்ய நினைச்ச எதையோ மறந்துபோயிருப்பீங்க. அது எல்லாத்தையும் மனசுக்குள் ஒரு ரீப்ளே பண்ணிப் பாருங்க.முதல் நாள் இது நாலஞ்சு நிமிஷத்தில் முடிஞ்சுபோயிடும். அப்புறம், அதுவே இன்னும் டைம் கூடும். எங்கியோ ஒரு மொமண்ட்ல தடக்குனு நீங்க உங்களை மறந்து ஒரு சூன்யத்துக்குள் போய் வருவீங்க. அந்த அனுபவம் தனி எனர்ஜி தரும். கிரியா யோகாவை முறையா கத்துத் தர நல்ல மாஸ்டர்ஸ் இருக்காங்க. யோகுடா சத்சங்கில் போய்ப் பாருங்க. கத்துக்கிட்டா இன்னும் நல்லா இருப்பீங்க... இது என் எக்ஸ்பீரியன்ஸ்!

so simple and so good !!

No comments: